Header Ads

  • BREAKING



    மரபணு மாற்றப்பட்ட கடுகை வணிக ரீதியாக பயிர் செய்ய அனுமதி வழங்க பரிந்துரை.



    இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை வணிக ரீதியாக சாகுபடி செய்ய அனுமதி வழங்குமாறு, மத்திய அரசுக்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக்குழு பரிந்துரை வழங்கியுள்ளது. வேளாண் வல்லுநர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பி.டி.கத்திரிக்காய் எதிர்பார்த்த பலனை அளிக்காததை அடுத்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி அறிமுகப்படுத்தப்பட்டது.
    மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் பருத்தி மட்டுமே தற்போது இந்தியாவில் பயிரிட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கும் அனுமதி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மரபணு பொறியியல் மதிப்பீட்டுக்குழு பரிந்துரைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களின் உடல்நலத்தை கவனத்தில் கொள்ளாமல் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள ஆர்.எஸ்.எஸ்., மரபணு மாற்ற கடுகை அனுமதிப்பது, மற்ற விவசாய நடவடிக்கைகளை பாதிக்கும் செயல் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad