Header Ads

  • BREAKING



    மரபணு மாற்றப்பட்ட கடுகு விதைக்கு அனுமதி: சுற்றுச்சூழல் அமைச்சகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.


    மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகள் வணிக நோக்கில் பயன்படுத்திட அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் டெல்லியில் உள்ள மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சக அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய மரபணு பொறியியல் மதிப்பிடல் குழு (ஜிஇஏசி) மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து தரமதிப்பீடு செய்யும். இந்தக் குழு கடந்த 11-ம் தேதி மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு-விதைகளை வணிக பயன்பாடுக்கு அனுமதி வழங்கியது.
    இதற்கு விவசாயிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து, டெல்லியில் உள்ள மத்தியச் சுற்றுச்சுழல் அமைச்சக அலுவலகம் முன்பு திரண்டு மாணவர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அனுமதிக்கும் “ஜிஇஏசி” நிறுவனம், அறிவியல் பூர்வமாகவும், ஏற்றத்தக்க வகையிலும் செயல்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.
    இதுகுறித்து நகர்ப்புற பண்ணை நிறுவனம் வைத்துள்ள ஜெர்மனியைப் பிறப்பிடமாகப் கொண்டு இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளாக வசிக்கும் பெண் ஒருவர் கூறும்போது, “விதைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை விவசாயிகள் நம்புவதால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்தும் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் விதைகளை மறுஉற்பத்தி செய்வதற்கு வாய்ப்பு இல்லை. வணிக ரீதியான பயன்பாட்டுக்காக பயிர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பின்னர் அதன் பழைய தன்மையில் அது அழைக்கப்படாது. இந்த விதைகள் மனிதனின் ஆரோக்கியத் தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதேநேரம், இதற்கான அறிவியல் சான்றுகள் ஏதுமில்லை” என்றார்.
    “ஷர்சான் சத்யாகிரகா” அமைப்பைச் சேர்ந்த கவிதா குருகான்டி கூறும்போது, “மதிப்பிழந்தும், எப்போதும் ரகசியமாக செயல்பட்டு வரும் “ஜிஇஏசி” அமைப்பைக் கலைக்க வேண்டும் என கோரி வருகிறோம்” என்றார்.
    சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, “கடுகு உற்பத்தி செய்யும் மாநிலங்களும், அரசியல் வாதிகளும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது, இது போன்ற விஷவிதைகள் விஷயத் தில் சுற்றுச்சூழல் அமைச்சகம் வேகமாகச் செயல்படுவது ஏன்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
    மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதையை வணிக பயன்பாட்டுக்கு அனுமதித்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெறவில்லை என்றால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.
    மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் தொடர்பான பொது விவாதத்துக்கு மத்தியச் சுற்றுச் சூழல் அமைச்சகம் தயாரா எனவும் அவர்கள் சவால் விடுத்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad