கோவாவில் ஆற்றுபாலம் இடிந்து விழுந்து விபத்து.
கோவாவில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததில் நீரில் மூழ்கிய 50 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
தெற்கு கோவாவின் கர்சோரம் நகரில் உள்ள ஆற்றின் குறுக்கே உள்ள நடைபாலம் வியாழனன்று மாலை திடீர் என இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 50க்கும் மேற்பட்டவர்கள் ஆற்று நீரில் விழுந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், ராணுவத்தினர் உள்ளிட்ட மீட்பு குழுவினர், மூழ்கியவர்களை தேடி வருகின்றனர். இதில் பாலத்தில் இருந்து குதித்தபோது உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை