Header Ads

  • BREAKING



    அரசு பெண் மருத்துவர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை.


    சென்னை எழும்பூர் அருகே, அரசு பெண் மருத்துவர் ஒருவர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். சூளை பகுதி, மாணிக்கம் தெருவைச் சேர்ந்த தம்பதி, சதீஷ் குமார் – சுதா மல்லிகா. இருவரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த படி, பட்ட மேற்படிப்பையும் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு, சாய் ஸ்ரீஹரா என்ற ஒன்றரை வயதில் மகன் உள்ளார்.
    பணி நேரம் காரணமாக மகனை கவனிக்க முடியாததால், சாய் ஸ்ரீஹரா, ஈரோட்டில் உள்ள மல்லிகாவின் தாயார் வீட்டில் வளர்ந்து வருகிறார். மகனை பிரிந்து சோகமாக காணப்பட்ட மல்லிகாவுக்கு நாளடைவில் மன அழுத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த மல்லிகா, காற்றாடியில் துப்பாட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். பணி முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய சதீஷ்,. மனைவி தற்கொலை செய்து கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. ((RDO))தாட்சாயினி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad