Header Ads

  • BREAKING



    தெற்காசிய நாடுகளுக்கான ஜிசாட் 9 செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட்டது.



    தெற்காசிய நாடுகளுக்கு பயன்படும் வகையில்,இந்தியா உருவாக்கியுள்ள ஜிசாட் 9 செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தகவல் தொடர்பு, இயற்கைப் பேரிடர் தொடர்பான தகவல்களை தெரிவிப்பது, டிஜிட்டல் தொழில் நுட்பம் போன்றவற்றிற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள், ஜி.எஸ்.எல்.வி – எஃப் 09 ராக்கெட் மூலம் விண்ணில ஏவி புதிய சாதனை படைத்தனர்.
    2 ஆயிரத்து 230 கிலோ எடைகொண்ட ஜிசாட் 9 செயற்கைக்கோள் 435 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது.ஜிசாட் 9 செயற்கைக்கோள் திட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்க மறுத்துவிட்டது. இருப்பினும் இந்தியா, நேபாளம், வங்கதேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டு என்று இஸ்ரோ கூறியுள்ளது. இதை ஏவுவதற்கான 28 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று மதியம் 12.57 மணிக்கு தொடங்கிய நிலையில், இன்று மாலை 4.57 மணிக்கு திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad