Header Ads

  • BREAKING



    நாயைக் கடத்திச் சென்று கறியாக்கி உண்ட கொடூர கும்பல்.


    டெல்லியை அடுத்த ஹரியானா மாநிலம் குருகிராமில் வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட நாய் ஒன்று காணாமல் போனது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு நாயைத் தேடி வந்தனர். இந்நிலையில் அந்த நாயை சிலர் கடத்திச் சென்று கொடூரமான முறையில் அடித்துக் கொன்றதுடன் அந்த நாய்க்கறியை சமைத்து உண்டதாக அதிர்ச்சிகரமான தகவல் காவல்துறைக்கு கிடைத்தது. இதையடுத்து நாயைப் பறிகொடுத்த குடும்பத்தினர் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் உதவியுடன் காவல்துறையிடம் மனு அளித்துள்ளனர். நாயைக் கடத்திக் கொன்ற குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கும்படி அந்த மனுவில் கோரியுள்ளனர்

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad