Header Ads

  • BREAKING



    அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்புக்குட்டி.



    ஹரியானாவில் அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில், இறந்த நிலையில் பாம்புக்குட்டி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபரிதாபாத்தில், ராஜ்கீயா பெண்கள் பள்ளியில், நேற்று மாணவிகளுக்கான மதிய உணவில் பாம்புக்குட்டி ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், உடனடியாக அதை யாரும் சாப்பிட வேண்டாம் என எச்சரித்து தடுத்து நிறுத்தினர். ஆனால், அதற்கு முன்னதாகவே அந்த உணவை சாப்பிட்ட மாணவிகள், வாந்தி எடுத்ததோடு மயக்கமடைந்தனர். மருத்துவமனையில் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
    இஸ்கான் என்ற உணவு விநியோக நிறுவனத்துக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு சமைத்த உணவு அனுப்பப்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களும் உணவு அருந்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad