Header Ads

  • BREAKING



    இளைஞரின் தலையை துண்டித்து காவல் நிலையத்தில் வீசிய வழக்கில் ஒருவர் கைது.


    இளைஞரின் தலையை துண்டித்து, கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் வீசிச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக செயல்பட்ட மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி பாகூரை அடுத்த குடியிருப்பு பாளையத்தை சேர்ந்தவர் சுவேதன். இவரை நேற்றிரவு அரிவாளால் வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள், தலையை மட்டும் தனியாக துண்டித்து எடுத்துள்ளனர். பின்னர் தலையை இருசக்கர வாகனத்தில் வைத்து கடலூர் நோக்கிச் சென்ற மர்ம நபர்கள் இருவர், ரெட்டிச்சாவடி காவல் நிலைய வாசலில் நின்று காவல் நிலையத்தை நோக்கி தலையை வீசிச் சென்றனர். இந்த காட்சி, காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
    படுகொலை செய்யப்பட்ட சுவேதனின் உடற்பகுதி புதுச்சேரி பின்னாச்சிகுப்பத்தில் கண்டெடுக்கப்பட்டது. காவல் நிலையத்தில் வீசப்பட்ட தலையும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குற்ற வழக்கு ஒன்றில், குற்றவாளிகளை அடையாளம் காட்டியதால் சுவேதன் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், சுவேதனின் நண்பர்களே அவரை படுகொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், காவல்நிலையத்தில் தலையை வீசிச் சென்றதாக வினோத் என்பவர் புதுச்சேரி பாகூர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த தாஸ், சர்மா ஆகிய இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad