மரத்திலிருந்து சேகரிக்கப்படும் மருத்துவ குணம் கொண்ட தண்ணீர்.
ரஷ்யாவில் மரத்திலிருந்து வழியும் மருத்துவ குணம் கொண்ட தண்ணீரை சேகரிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிர்ச் ()) என்ற வகை மரத்தில் துளையிட்டு, அதிலிருந்து வழியும் தண்ணீரை அவர்கள் கேன்களில் சேகரிக்கின்றனர். ஓர் ஆண்டில் 2 வாரங்கள் மட்டுமே இந்த தண்ணீர் சுரக்கும். அதாவது பனிக்காலத்தில் பொழிந்த பனிக்கட்டிகள், பின்பனிக்காலத்தில் உருகத் தொடங்கும்போது, பிர்ச் மரத்தில் இலைகள் தளிர்க்கும். அந்த நேரத்தில் 2 வாரங்கள் மட்டுமே இந்த தண்ணீர் சுரக்கும் என்பதால், இதற்கு நல்ல கிராக்கி உள்ளது. பனிக்காலத்தின்போது நிலத்திலிருந்து உறிஞ்சிய தண்ணீரே மருத்துவ குணத்தோடு இருப்பதாக தாவரவியல் ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை