Header Ads

  • BREAKING



    அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,663 பணியிடங்கள்: ஜூலை 2-ல் எழுத்துத் தேர்வு.


    அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,663 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
    இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் காகர்லா உஷா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலைபட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 1,663 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஜூலை 2-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் விண்ணப்ப பதிவு 10-ம் தேதி (இன்று)முதல் தொடங்கும். விண்ணப்பிக்க கடைசி நாள் மே மாதம் 30-ம் தேதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தேர்வு கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எனில் ரூ.250. விண்ணப்பக் கட்டணத்தை நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் ஆன்லைனிலேயே செலுத்திவிட வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி: http://trbonlineexams.in/PG/
    எழுத்துத்தேர்வில் தேர்வர்களின் முதன்மை பாடத்தில் இருந்து 110 கேள்விகள், கல்வியியல் தொடர்பாக 30 கேள்விகள், பொது அறிவு பகுதியில் 10 கேள்விகள் வீதம் மொத்தம் 150 வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 150. தேர்வு நேரம் 3 மணி நேரம். எழுத்துத்தேர்வு மதிப்பெண் மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் (வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு, பணி அனுபவம்) அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad