Header Ads

  • BREAKING



    மேலும் 2 நாட்களுக்கு வெப்பம் நீடிக்கும்: சென்னை வானிலை மையம் தகவல்.


    வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரு நாட்களுக்கு 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    கத்திரி வெயில் தொடங்கியதிலிருந்தே வட தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. கத்திரி வெயில் நிறைவடைய இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் குறையாமல் சுட்டெரித்து வருகிறது. இதனிடையே பல்வேறு பகுதிகளில் கோடை மழையும் பெய்து வருகிறது.
    இது தொடர்பாக சென்னை வானிலைமைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    கடந்த 24 மணி நேரத்தில் மதுரை, நடுவட்டம், ஏற்காடு, உதகமண்டலம், தருமபுரி, திண்டுக்கல் பகுதிகளில் தலா 5 செமீ, சோழ வந்தான், குன்னூர், தளி, சிட்டம்பட்டி தலா 4 செமீ, பொள்ளாச்சி, கோத்தகிரி, திருபுவனம், பவானிசாகர், பர்கூர், மேட்டுப்பட்டியில் தலா 3 செமீ, திருப்பத்தூர், வாடிப்பட்டி, ஒகேனக்கல், கோபிசெட்டிப்பாளையம், மேட்டூர் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
    அடுத்த இரு நாட்களுக்கு வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு உள்ளது.
    நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை அளவின்படி, திருத்தணியில் 107.96 டிகிரி ஃபாரன்ஹீட், வேலூரில் 105.44, பரங்கிப்பேட்டையில் 104, சென்னையில் 103.64, கரூர் பரமத்தியில் 103.28, திருச்சியில் 101.3, நாகப்பட்டினத்தில் 101.12, கோவையில் 100.58 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது என்று அவர் கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad