இதுவும் இருக்கும் அதுவும் இருக்கும்: வானிலை மையம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் வெப்பத்தின் தாக்கமும் அதிகரிக்கக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூரில் 9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. தருமபுரியில் 6 சென்டிமீட்டர் மழையும் சேலத்தில் 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியிருக்கிறது.
வெயிலைப் பொறுத்தவரை அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அங்கு மிதமான மழையும் பெய்திருக்கிறது. அதற்கு அடுத்து வேலூரில் 106 டிகிரி வெப்பம் பதிவானது. அங்கும் பரவலாக மழை பெய்தது. திருத்தணியில் 106 டிகிரி வெப்பமும் திருச்சியில் 105 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது.
கருத்துகள் இல்லை