Header Ads

  • BREAKING



    புதுக்கோட்டை: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 27-வது நாளாக போராட்டம்.


    ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 27- வது நாளாக போராடும் மக்கள், தலையில் காலி மண்பானைகளை வைத்துக் கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஜெம் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதையடுத்து இரண்டாம் கட்டமாக மக்கள் போராட்டத்தை தொடங்கினர். 27-வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில், தினம் தினம் நூதன முறையில் தங்களது எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இன்று தலையில் காலி மண்பானைகளுடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீருக்காக! என்ற வாசகம் பானையின் மீது எழுதி ஒட்டப்பட்டிருந்தது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad