ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கலைக்க மத்திய அரசு முயற்சி.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தை கலைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக இயக்குனர் கௌதமன் குற்றம் சாட்டினார். இத்திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் நடைபெறும் இரண்டாவது கட்ட போராட்டம் 32வது நாளை எட்டியது. சனிக்கிழமையன்று இயக்குனர் கௌதமன் போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை தொடரும் இந்த போராட்டத்தை சிதைக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
கருத்துகள் இல்லை