Header Ads

  • BREAKING



    விமான நிலையத்தில் உள்ள நடைமேடை மீது மோதிய இண்டிகோ விமானம்.


    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் உள்ள நடைமேடை மீது இண்டிகோ விமானம் மோதி விபத்துக்குள்ளானது. டெல்லியில் இருந்து 174 பயணிகளுடன் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் விமான நிலையம் வந்த இண்டிகோ விமானம், பயணிகள் நடக்கும் நடைமேடையில் மோதியது. இதில் விமானத்தின் இறக்கை ஒன்று பழுதானது. நல்வாய்ப்பாக விமானத்தில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. விபத்து தொடர்பாக விமானப் போக்குவரத்து ஒழுங்கு முறை ஆணையத்தில் தாமாகவே புகார் அளித்துள்ளதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் பாதுகாப்புத் துறை மூலமாகவும் விசாரணை நடத்தப்படுமென்று இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad