Header Ads

  • BREAKING



    இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக சீனா செயல்படுவதாக குற்றச்சாட்டு.


    தடையற்ற வர்த்தகத்திற்கு தலைமை ஏற்றுள்ள சீனா பட்டுப்பாதைக்கு பல்லாயிரம் கோடி டாலர்களை செலவிட தயாராக உள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற பெல்ட் அன்ட் ரோடு தொடர்பான கருத்தரங்கை இந்தியா புறக்கணித்துள்ள நிலையில் பாகிஸ்தான், இலங்கை, ரஷ்யா உள்ளிட்ட 29 நாடுகளின் பங்கேற்புடன் புதிய வர்த்தக பட்டுப்பாதையை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது.
    சீனாவின் அழைப்பை ஏற்று ரஷ்யா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் சீனாவின் மாநாட்டில் கலந்துக் கொண்டனர். ஆயினும் இந்தியா, பூட்டான் போன்ற அண்டை நாடுகள் சீனாவின் முக்கியமான அழைப்பை நிராகரித்துவிட்டன. பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியை சீனா பாகிஸ்தானின் பகுதியாக ஏற்றுக் கொண்டதற்கு இந்தியா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
    மேலும் சீனாவின் இந்த புதிய தடையற்ற வர்த்தகப் பட்டுப்பாதை பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாக அமைக்கப்படுவதற்கும் இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad