Header Ads

  • BREAKING



    காஷ்மீர் இல்லாத இந்திய வரைப்படத்தை விற்று சர்ச்சையில் சிக்கிய அமேசான்,


    ஜம்மூ காஷ்மீர் மாநிலம் இடம்பெறாத இந்திய வரைப்படத்தை ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், விற்பனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாஜக செய்திதொடர்பாளர் தஜிந்தர் பால் சிங் பாகா ((Tajinder Pal Singh Bagga)) டுவிட்டரில் பதிவிட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏற்கனவே, இந்திய கொடி அச்சிடிப்பட்ட கால் மிதிகளை விற்பனை செய்து கண்டனத்திற்கு உள்ளான நிலையில், கனடாவில் இயங்கும் அமேசான், தவறான இந்திய வரைப்படத்தை இணையதளத்தில் விற்பனைக்கு வெளியிட்டு, இந்தியாவை அவமதிக்கும் நோக்கில் தொடர்ந்து செயல்படுவதாக விமர்சனங்கள் வலுத்துள்ளன. ஜம்மு காஷ்மீர் பகுதிகளை உரிமை கொண்டாடும் விவகாரத்தில், பாகிஸ்தானுடன் பிரச்சனை இருக்கும் நிலையில், இதுபோன்ற சம்பவங்களுக்கு இந்தியா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad