Header Ads

  • சற்று முன்



    இந்திய வீரர்களின் உடல்களுக்கு ஜம்முவில் ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி.


    பாகிஸ்தான் படையினரால் உடல் சிதைக்கப்பட்ட இந்திய வீரர்களுக்கு ஜம்முவில் ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணாகாட்டி பகுதியில் நேற்று இந்திய எல்லைக்குள் திருட்டுத்தனமாக அத்துமீறி பாகிஸ்தான் படையினர் நுழைந்துள்ளனர். ரோந்து சென்று கொண்டிருந்த இந்திய ராணுவத்தின் பஞ்சாப் படைப் பிரிவு வீரர் பரம்ஜித் சிங், எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரேம்சாகர் ஆகியோரை படுகொலை செய்து உடல்களை சிதைத்துப் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இந்நிலையில் இன்று ஜம்முவுக்கு கொண்டு வரப்பட்ட இருவரது உடல்களுக்கும் ராணுவ மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது ராணுவ முகாமுக்கு வெளியே உள்ளூர்வாசிகள் சிலர் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபத்துக்குரியதாக இருந்தது. தனது தந்தையின் தலைக்கு பதிலாக 50 தலைகள் வேண்டும் என்று உத்தரப்பிரதேச மாநில வீரர் பிரேம் சாகரின் மகள் தெரிவித்தார். இதனிடையே பாகிஸ்தான் படையினரால் இந்திய வீரர்களின் உடல் சிதைக்கப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பாதுகாப்பு அமைச்சர் அருண்ஜேட்லி விளக்கம் அளிக்கவுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad