Header Ads

  • BREAKING



    பாகிஸ்தானில் தீவிரவாதிகள் உறைவிடங்களை தாக்குவோம் – ஈரான்.


    பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் உறைவிடங்களை தாக்கி அழிக்கப் போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஈரான் எல்லைப் பாதுகாப்புப் படையினர் 10 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்துள்ள ஈரான் ராணுவம், தங்கள் நாட்டினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்ற நிலை தொடர்வதை தாங்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ள ஈரான், தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர்கள் பாகிஸ்தானில் எங்கு மறைந்திருந்தாலும் தாக்குதல் நடத்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad