ஆட்குறைப்பு செய்து செலவினங்களைக் கட்டுப்படுத்த ஐ.டி. நிறுவனங்கள் முயற்சி
ஆட்குறைப்பின் மூலம் செலவினங்களைக் குறைக்கும் வகையில், சரியாக பணியாற்றாதவர்கள் என ஐடி ஊழியர்களை வகைப்படுத்தி அவர்களை நிறுவனங்கள் பணியிலிருந்து நீக்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகரிக்கும் ஆட்டோமேஷன் முறைகள், ஒப்பந்தங்கள் புதுப்பிக்காதது, அமெரிக்கர்களை பணியிலமர்த்த வேண்டும் என்ற அந்நாட்டு அதிபர் டிரம்பின் உத்தரவு உள்ளிட்ட பல்வேறு தாக்கங்களால், ஐ.டி. துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக வேலையை விட்டுச் செல்லத் தயாராக இருக்குமாறு சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடம் அறிவுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
நடுத்தர மற்றும் மூத்த நிலையில் இருக்கும் பலரை வேலையில் இருந்து அகற்ற, அவர்களை சரியாக பணியாற்றாதவர்கள் என்ற பட்டியலில் நிறுவனங்கள் இணைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. பட்டியலில் இணைக்கப் பெற்றவர்கள், தங்களை வேலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாவிட்டால், பணியிழக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை