ஆம் ஆத்மி கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்.
ஆம் ஆத்மி கட்சியின், நன்கொடையாளர் பட்டியலில் விவரங்கள் பொருந்தாமல் இருப்பதாகக் கூறியுள்ள வருமான வரித்துறை, அக்கட்சியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடைகளை வரிவிலக்குப் பிரிவு கண்காணித்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் இணையதளத்தில் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிதி வழங்கிய நன்கொடையாளர்களின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அக்கட்சி தாக்கல் செய்துள்ள வருமான அறிக்கையுடன் ஒப்பிடும்போது, இரு பட்டியலின் விவரங்கள் பொருந்தவில்லை என்றும், எனவே, இதுகுறித்து, வரும் 15-ம் தேதி பிற்பகல் மூன்றரை மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை அக்கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கருத்துகள் இல்லை