Header Ads

  • BREAKING



    வருமானவரித்துறை கூடுதல் இயக்குனர் ராய் ஜோஸ் திடீர் இடமாற்றம்.



    சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி, முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன்ராவ் ஆகியோரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு கூடுதல் இயக்குனர் ராய் ஜோஸ் சென்னையில் இருந்து நாக்பூருக்கு திடீர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    தமிழகத்தின் தலைமைச் செயலாளராக ராமமோகனராவ் இருந்த போது அவரது வீட்டிலும், சென்னை தலைமை செயலகத்திலும் வருமானவரித்துறையினரை விட்டு சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் வருமான வரித்துறை புலனாய்வுப்பிரிவு கூடுதல் இயக்குநர் ராய் ஜோஸ்..!
    இந்நிலையில்,சென்னையில் வருமான வரித்துறை புலனாய்வுப்பிரிவு கூடுதல் இயக்குநனாரக பணிபுரிந்துவந்த ராய் ஜோஸ், நாக்பூருக்கு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோத பணப்பறிமாற்றத்தில் ஈடுபட்ட சேகர் ரெட்டியின் வீடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கத்தையும் கிலோ கணக்கில் தங்க கட்டிகளையும் வருமானவரித்துறை பரிமுதல் செய்ய காரண கர்த்தாவாக இருந்தவர் ராய்ஜோஸ்..!
    அண்மையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு அலுவலகம் என விரிவான சோதனை நடத்தி அரசியல் அரங்கில் அதிர்வலைகளை உண்டாக்கியவர் வருமானவரித்துறை கூடுதல் இயக்குனர் ராய்ஜோஸ்..! இந்த சோதனைக்கு பின்னர் தான் ஆர்,கே நகர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
    சேகர் ரெட்டி, ராமமோகன் ராவ் ஆகியோர் மீதான வழக்குகளை நேரடியாக விசாரித்துவந்தவர் ராய் ஜோஸ், கடந்த 150 நாட்களாக தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்து வந்த வருமானவரித்துறை வேட்டையை ஒருக்கிணைத்த ராய் ஜோஸ் திடீர் என பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அண்மையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம் என்று அமைச்சரவை கூட்டத்தில் கூறியிருந்த நிலையில் வருமானவரித்துறை அதிகாரி ராய் ஜோஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad