Header Ads

  • BREAKING



    தலை ரொம்ப அரிக்குதா? அதைத் தடுக்க இதோ சில எளிய குறிப்புகள்.



    கூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்பையும், செதில் செதிலாக உதிர்ந்து ஒரு வித தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே. மேலும் மன அழுத்தம், ஊட்டச் சத்துக் குறைபாடும் பொடுகு ஏற்பட காரணமாகும். எனவே ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் பொடுகை தவிர்க்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். மன அழுத்தம் இன்றி அமைதியை கடைபிடித்தால் பொடுகு வராமல் தவிர்க்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். கோடைக்காலத்தில் எப்போதுமே அதிகமாக வியர்வை வெளியேறும். அதுவும் குளித்து முடித்து உடுத்திய உடை 1 மணிநேரத்திலேயே மீண்டும் ஈரமாகும் அளவில் கோடைக்காலத்தில் அனல் அதிகமாக இருக்கும். அதிலும் அக்னி நட்சத்திர நாட்கள் மிகவும் கொடுமையாக இருக்கும்.
    கோடையில் மட்டும் வியர்வையினால் சருமத்தில் மட்டுமின்றி, தலையிலும் ஏராளமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் ஒன்று தான் தலை அரிப்பு. ஆம், அதிகமாக வியர்ப்பதால், தலை பயங்கரமாக அரிக்க ஆரம்பிக்கும். 


    வியர்வையால் ஏற்படும் தலை அரிப்பைத் தடுக்க இதோ சில குறிப்புகள்:.
    குறிப்பு-1   இந்தியர்கள் அனைத்து பருவ காலங்களிலும் தங்களது தலைக்கு தினமும் தவறாமல் எண்ணெய் வைப்பார்கள். ஆனால் மற்ற காலங்களை விட, கோடையில் ஸ்கால்ப்பில் சற்று அதிகமாக எண்ணெய் உற்பத்தியாகும் என்பதால், தலையில் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களின் அளவு அதிகரித்து, பொடுகு வருவதால் அரிப்பு ஏற்படுகிறது. எனவே கோடையில் எண்ணெய் வைக்காதீர்கள்.

    குறிப்பு-2     மற்ற காலங்களை விட கோடைக் காலத்தில், ஸ்கால்ப்பில் அழுக்குகளின் அளவு அதிகரிப்பதால், வாரத்திற்கு 2-3 முறை தவறாமல் தலைக்கு குளித்துவிட வேண்டும். ஒருவேளை அளவுக்கு அதிகமாக வியர்த்தால், தினமும் தலைக்கு குளியுங்கள்.
    குறிப்பு-3  ஷாம்பு போட்ட பின் பயன்படுத்தும் கண்டிஷனரை ஸ்கால்ப்பில் படும்படி போட வேண்டாம். இல்லாவிட்டால் அது மயிர்கால்களை கடுமையாக பாதித்து, தலையில் அரிப்பு மற்றும் பொடுகை அதிகரித்துவிடும்.
    குறிப்பு-4    முக்கியமாக தலைமுடிக்கு கெமிக்கல்கள் கலந்த கலரிங் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதில் உள்ள கெமிக்கல்களே ஸ்கால்ப்பை கடுமையாக பாதித்து அரிப்பை ஏற்படுத்தும். ஆகவே கலரிங் செய்வதைத் தவிர்த்து, முடிந்தவரை முடியின் இயற்கை நிறத்தைப் பாதுகாக்க முயற்சி செய்யுங்கள்.
    குறிப்பு-5   வெளியே வெயிலில் செல்லும் போது, சூரியக்கதிர்கள் நேரடியாக தலைமுடியைத் தாக்காதவாறு, தலைக்கு தொப்பி போடுங்கள் அல்லது துணியைக் கட்டிக் கொண்டு செல்லுங்கள். அதுவும் காட்டன் துணியை தலைக்கு கட்டிக் கொண்டு சென்றால், வியர்வை முழுமையாக உறிஞ்சப்பட்டு, அரிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.
    குறிப்பு-6   பூச்சித்தாக்குதலினால் பொடுகு ஏற்படுவது இயற்கை. எனவே அந்த மாதிரி நேரங்களில் ரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும். துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.
    குறிப்பு-7    பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் உறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.
    குறிப்பு-8    வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், "பொடுகு தொல்லை நீங்கும்". தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகுபிரச்னை நீங்கும்.
    குறிப்பு-9   வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறையும். 
    குறிப்பு-10   வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகுதொல்லை நீங்கும். 

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad