Header Ads

  • BREAKING



    காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.


    சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காளீஸ்வரி எண்ணெய் நிறுவன ஆலை மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.காளீஸ்வரி எண்ணெய் நிறுவனம் கோல்டு வின்னர், கார்டியா லைஃப், தீபம் விளக்கேற்றும் எண்ணெய் உள்ளிட்டவற்றை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சென்னை மாம்பாக்கத்தை அடுத்த வேங்கைவாசல், திண்டுக்கல் ஆகிய இடங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது.
    மேலும் காளீஸ்வரி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று காலை சுமார் 6 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். காளீஸ்வரி நிறுவனம் பல ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று எழுந்த புகாரை அடுத்து, மயிலாப்பூரில் உள்ள உரிமையாளர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
    மேலும், திண்டுக்கல், விருதுநகர், விழுப்புரம், வேலூர் உள்பட தமிழகம் முழுவதும் காளீஸ்வரி நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad