குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆந்திராவில் ‘கால் சென்டர்’.
குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க ‘‘கால்சென்டர்’ திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார்.
அமராவதியில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த அவர் பேசியதாவது:
கிராமப்புறங்களில் குடிநீர் பிரச்சினை பற்றி பொதுமக்கள் இலவசஎண் மூலம் தொலைபேசியில் புகார் அளிக்கலாம். அந்தப் புகாரின் அடிப்படையில் உடனடியாக அந்தக் கிராமத்தில் தண்ணீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும். இதற்கு ‘ஜல வாணி’ திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்காகப் பொதுமக்கள் 1800 425 1899 என்ற இலவச எண்ணுக்கு தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம்.
‘ரியல் டைம் அலர்ட் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்’ மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனைப் பொதுமக்கள் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை