Header Ads

  • BREAKING



    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்தும் 160 தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவி – உளவுத்துறை.



    காஷ்மீர் மாநிலத்தில் 160 தீவிரவாதிகள், பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தி வருவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இந்திய ராணுவம் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் அங்கிருந்த பல பயங்கரவாத முகாம்கள் அழித்தொழிக்கப்பட்டன.
    இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து எல்லையோரம் இருந்த பல முகாம்கள் பாகிஸ்தானின் உள்மாவட்டங்களுக்குச் சென்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மீண்டும் பயங்கரவாத முகாம்கள் புதிதாக உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உளவுத் துறை தகவலின்படி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஏற்கெனவே இயங்கி வந்த 35 பயங்கரவாத முகாம்களுடன் புதிதாக 20 முகாம்கள் உருவாகியுள்ளதாகவும், மொத்தம் 55 முகாம்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 60 முறை இந்திய எல்லைக்குள் ஊடுருவ பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதனை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் முறிடியடித்துள்ளனர். இதுதவிர காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் உத்தரவின் பேரில் செயல்படும் 160 பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்கள்தான் பாதுகாப்புப் படையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஜம்மு – காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்களை மேலும் அரங்கேற்ற பயங்கரவாதக் குழுக்கள் முயன்று வருகின்றன என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad