நகைகடைகளில் புகுந்து கொள்ளையடித்த பெண், சிசிடிவி -யை வைத்து தனிப்படை போலீசார் பிடித்தனர்.
சென்னை தியாகராயர் நகரில் பிரபல நகை மற்றும் ஜவுளி கடைகளில் புகுந்து கொள்ளையடித்த ரவுடியின் மனைவியை போலீசார் கைது செய்தனர். தியாகராயர் நகர் வடக்கு உஸ்மான் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல நகைகடைகளிலும், ஜவுளி நிறுவனங்களிலும் புகுந்து மர்ம பெண் ஒருவர் நகை மற்றும் துணி வாங்குவது போல் நடித்து கொள்ளையடித்து வந்துள்ளார். இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். சம்மந்தப்பட்ட நிறுவனங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார் அதில் இளம்பெண் ஒருவர் திருடுவது போல் காட்சிகள் பதிவாகியிருந்தது. அதை வைத்து தியாகராயர் நகர் தாமஸ் சாலையை சேர்ந்த நிஷாந்தி என்ற 24 வயது பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து நகை கடையில் திருடிய 40 சவரன் தங்க நகைகள் மற்றும் 2 விலையுர்ந்த பட்டுபுடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நிஷாந்தி, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி லூக்காஸ் என்பவரின் மனைவி என்பதும், தியாகராயர் பகுதியில் பிரபல விற்பனை நிறுவனங்களில் கொள்ளையடித்த பொருட்களை விற்று இருச்சக்கர வாகனம், குளிர் சாதனப்பெட்டி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை வாங்கி சொகுசாக வாழ்ந்து வந்துள்ளார். கைது செய்யப்பட்ட நிஷாந்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை