Header Ads

  • BREAKING



    ஜார்கண்ட்: குழந்தைகளை கடத்துவதாக குற்றம்சாட்டி 6 பேரை அடித்துக்கொன்ற பொதுமக்கள்.



    ஜார்கண்ட் மாநிலத்தில் குழந்தைகளை கடத்துவதாக குற்றம்சாட்டி 6 பேரை பொதுமக்கள் அடித்துக்கொன்றனர்.
    சிங்பும் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் குழந்தைக் கடத்தல் சம்பவங்கள் தொடர்கதையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதி கிராமம் ஒன்றில் விகாஸ்குமார் வர்மா, கவுதம்குமார் வெர்னா, கங்கேஷ் குப்தா என்ற மூன்று நபர்கள வீட்டுக்குள் இருந்து வெளியே இழுத்து வந்த கிராம மக்கள் சரமாரியாகத் தாக்கியதில் மூவரும் உயிரிழந்தனர்.
    மேலும் அந்த மூவருடன் இருந்த பெண் ஒருவரும் பொதுமக்களால் கடுமையாக தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்தார். இதேபோன்று மற்றொரு கிராமத்தில் குழந்தைகளை கடத்துவதாகக் கூறி நயீம், சேரஜ்கான், சஜ்ஜு என்ற மூன்று கால்நடை வணிகர்களை பொதுமக்கள் அடித்துக்கொன்றனர்.
    இந்த இருசம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவந்த காவல்துறையினரை நோக்கி பொதுமக்களின் ஆத்திரம் திரும்பியது. பொதுமக்கள் தாக்கியதில் சில போலீசார் காயம் அடைந்தனர். காவல்துறை வாகனங்களுக்கும் நெருப்பு வைக்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad