Header Ads

  • BREAKING



    வந்துவிட்டது புதிய ஜியோஃபை..!


    தினந்தினம் புதுப்புது ஆஃபர்களை அறிமுகப்படுத்தி மக்களை உற்சாகப்படுத்தும் ஜியோ தனது அடுத்த சலுகையை அறிவித்துள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது ஜியோஃபை என்ற புதிய சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் நாம் ஏற்கனவே பயன்படுத்தும் மற்ற கம்பெனி ரூட்டர், டேட்டா கார்டு, டாங்கல், ஹாட்ஸ்பாட் போன்றவற்றை ஜியோ ரிலையன்ஸ் ஷோரூமில்   கொடுத்து புதிய ஜியோஃபை சாதனத்தை வாங்கி செல்லலாம். இதற்காக ரூ.1999 செலுத்த வேண்டும். மற்ற தொலைத்தொடர்பு சேவைகளை விட ஜியோஃபையில் அதிக வேகத்தில் இணையத்தை பயன்படுத்த முடியும். மேலும் ஜியோ சிம் கார்ட்டில் ஜியோ பிரைம் வாடிக்கையாளராக ரூ.99 மற்றும் மூன்று மாதங்களுக்கு சலுகை விலை இணையத்தை பெற ரூ. 309 செலுத்தியது போன்று
    ஜியோஃபை ரூட்டருக்கும் செலுத்த வேண்டும். இந்த ஜியோஃபை சாதனத்தை பயன்படுத்தி கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல்களில்
    இணையத்தை பெறலாம். 4 ஜி பயனர்கள் ஜியோவை அனுபவிக்க முடியவில்லையே என நினைப்பவர்கள் இந்த ஜியோஃபை சாதனத்தின் மூலம் பெறலாம். வைஃபை போன்று ஜியோஃபையை ஒன்றுக்கும் மேற்பட்டோரும் பயன்படுத்த முடியும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad