Header Ads

  • BREAKING



    நீதிபதி கர்ணனை கைது செய்ய சென்னை வந்த கொல்கத்தா போலீசார்.



    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்வதற்காக மேற்கு வங்க டி.ஜி.பி. தலைமையிலான போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
    கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் ஓய்வு பெற்ற மற்றும் பொறுப்பில் இருக்கும் நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவந்தார். இதையடுத்து அவருக்கு மனநலப் பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக மனநலப் பரிசோதனை, கைது உள்ளிட்ட உத்தரவுகளை நீதிபதி கர்ணன் பிறப்பித்தார். இந்நிலையில் நீதித்துறைக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து அவரைக் கைது செய்வதற்காக மேற்கு வங்க டி.ஜி.பி. ராஜ் கனுஜ், துணை டி.ஜி.பி, ரபின்குமார், துணை ஆணையர் சுதாகர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் சென்னை வந்தனர். அவர்கள் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கரண் சின்ஹாவுடன் ஆலோசனை நடத்தினர். நீதிபதி ஒருவரை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சட்டச் சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை அதிகாரிகள் விடுதிக்கு சென்றுள்ளனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த நீதிபதி கர்ணன் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றிருப்பதாகவும், தமிழக போலீசார் உதவியுடன் அவரை கைது செய்ய கொல்கத்தா போலீசார் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad