Header Ads

  • BREAKING



    நீதிபதி கர்ணன் விவகாரம்: குடியரசுத் தலைவரிடம் புதிய மனு.


    உச்ச நீதிமன்றம் பிறப்பித்த 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் சார்பில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் புதியமனு வழங்கப்பட்டுள்ளது.
    இது குறித்து வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே.நெடும்பாரா கூறும்போது, ''நீதிபதி கர்ணன் சார்பில் அவரது மகன் சி.எஸ்.சுகன், இன்று குடியரசுத் தலைவரின் செயலாளர் அசோக் மேத்தாவை சந்தித்து அரசமைப்பு சட்டம் 72-வது பிரிவின்படி உச்ச நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யுமாறு மனு அளித்துள்ளார்.
    நீதிபதி கர்ணன் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசவும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது'' என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad