Header Ads

  • BREAKING



    நீதிபதி கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்.


    6 மாத சிறைத் தண்டனையை திரும்பப் பெறக் கோரி நீதிபதி கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு முறையிடப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் 6 மாத சிறைத் தண்டனை விதித்ததையடுத்து அவரை கைது செய்ய மேற்கு வங்க போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர். நேற்று முதல் கர்ணனை போலீசார் தேடி வரும் நிலையில் தற்போது வரை அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. இந்நிலையில் கர்ணன் நேபாளம் அல்லது வங்கதேசத்திற்கு சென்றிருக்க வாய்ப்பிருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தண்டனையில் இருந்து விலக்கு பெற்றுத் தர சர்வதேச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் பரிந்துரைக்குமாறு கர்ணன் சார்பில் மனுச்செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார். அவர் எங்கும் தலைமறைவாகவில்லை என்றும் தமது வழக்கு தொடர்பான ஆவணங்களை தயாரித்து முடிக்கும் வரை அவர் மறைவாக இருப்பார் என்றும் தெரிவித்த வழக்கறிஞர் அவர் தங்களுக்கு அனுப்பும் ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறினார். இதனிடையே நீதிபதி கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில் 6 மாத சிறைத் தண்டனையை திரும்பப் பெறக் கோரப்பட்டது. அதனை பரிசீலிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad