நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க நீதிபதி கர்ணன் விருப்பம்: வழக்கறிஞர் தகவல்.
புதுடில்லி: கோர்ட் அவமதிப்பு வழக்கில் கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து அவரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், அவரது சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான வழக்கறிஞர், கைது நடவடிக்கைக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த கோர்ட், இதனை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். நீதிபதிகள் வரும் போது விசாரணை நடத்தப்படும் எனக்கூறியது.
அப்போது, கர்ணன் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க விரும்புகிறார். ஆனால், இது தொடர்பான மனுவை வாங்க சுப்ரீம் கோர்ட் பதிவாளர் மறுக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை