Header Ads

  • BREAKING



    குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடையை இடித்துத் தள்ளிய பொதுமக்கள்.


    காஞ்சிபுரம் குடியிருப்பு பகுதியில் மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, புதிதாக கட்டப்பட்டு வரும் கடையை பொதுமக்கள் இடித்து தள்ளினர். பாலிசெட்டிபுரத்தை அடுத்த சிருணை பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை அபிராமி நகரில், புதிதாக அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது.
    இதனால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் எனக் கூறி, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் மக்களின் எதிர்ப்பினை மீறி அப்பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கான கட்டுமானப் பணிகளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், புதிதாக கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடையின் முன்னே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் டாஸ்மாக் கடையின் கட்டுமானத்தை இடித்துத் தள்ளினர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad