கன்னியாகுமரில் கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு.
கோடை விடுமுறையை முன்னிட்டு, சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்தியாவின் பல்வேறு மாநிலங்களிருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் மண்டபம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல சுற்றுலா படகுகளில் மிகுந்த ஆர்வத்துடன் பயணிகள் சென்றுவருகின்றனர். மேலும், முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் நீண்ட நேரம் உற்சாகமாக குளித்து செல்கின்றனர்.
கடற்கரை, கோவளத்தில் உள்ள நீர் விளையாட்டு பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
கருத்துகள் இல்லை