Header Ads

  • BREAKING



    வாட்ஸ் ஆப் மூலம் தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை-காவல் ஆணையர் கரண் சின்கா.


    வாட்ஸ் ஆப் மூலம் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் கரண் சின்கா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட 8 தொலைதொடர்பு துறை நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார். முறையான ஆவணங்கள் இல்லாமல் சிம்கார்டுகளை விற்பனை செய்யும் முகவர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். உண்மைக்கு புறம்பான தகவல்களை குறுஞ்செய்திகள், வாட்ஸ் ஆப் மூலம் அனுப்புவோரை கண்காணிக்க செல்போன் நிறுவனங்கள் காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டுமென கரண் சின்கா கேட்டுக் கொண்டுள்ளார்

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad