Header Ads

  • BREAKING



    காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம்.



    காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கர்நாடக மாநில அரசு கூட்டி உள்ளது.
    அந்த மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் வருகிற 9–ந் தேதி அன்று பெங்களூருவில் கூட்டம் நடைபெறும் என்றும் அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஜூலை மாதம் 11–ந் தேதி முதல், தொடர்ச்சியாக 15 நாட்கள் நடத்தி முடிக்கப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் சித்தராமையா தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் மேகதாதுவில் புதிய அணையை கட்டுவது, மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணையின்போது எந்தெந்த தகவல்களை எடுத்துக்கூறுவது என்பன குறித்து விவாதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad