Header Ads

  • BREAKING



    காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.


    வடக்கு காஷ்மீரின் நவ்காம் எனும் இடத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு கடும் சண்டை நடைபெற்றது. இதில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 2 பாதுகாப்புப் படை வீரர்களும் உயிரிழந்தனர்.
    அதே பகுதியில் நேற்றும் 2 தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படை வீரர்கள், அவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர். இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
    இதுபற்றி ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, “தீவிரவாதிகளின் தேடுதல் வேட்டையில் 2 நாட்களில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது” என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad