Header Ads

  • BREAKING



    காஷ்மீர் எல்லையில் நான்காவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு.


    தொடர்ந்து நான்காவது நாளாக காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ரஜோரியின் சிட்டி பக்ரி என்ற இடத்தில் எல்லையோரம் உள்ள 7 கிராமங்களை குறிவைத்து அதிகாலை 6.45 மணி முதல் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. தானியங்கி எந்திரங்கள், சிறிய ரக ஆயுதங்கள், மோர்ட்டார் ரக குண்டுகள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் மனிஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் கடுமையான தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்து வருவதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தானின் அத்துமீறலால் 4 நாட்களில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பதற்றம் காரணமாக நவ்சேராவில் பள்ளிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதுடன், எல்லையோர கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    இதனிடையே எல்லையில் இந்திய ராணுவம் தான் அத்துமீறலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள பாகிஸ்தான், இந்தியாவின் துணை தூதர் ஜே.பி. சிங்குக்கு சம்மன் அனுப்பியுள்ளது. தாக்குதல் தொடர்பான பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஜே.பி.சிங், பாகிஸ்தான் ராணுவம் தான் எல்லையில் முதலில் தாக்குதல் நடத்துவதாக கூறியுள்ளார். ஜன்கர், பவானி, லாம் பெல்ட்ஸ், நவ்சேரா, ரஜோரி ஆகிய இடங்களில் பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad