Header Ads

  • BREAKING



    காஷ்மீர் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமே சுமுகத்தீர்வு கிடைக்கும் -நவாஸ் ஷெரீப்.


    காஷ்மீர் பிரச்சினைக்கு சுமுகத்தீர்வு காண இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுவது ஒன்றே வழி என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். சீனாவிற்கு சென்றுள்ள அவர், தலைநகர் பெய்ஜிங்கில் பிரதமர் லீ கெய்கியாங்கை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் ஷெரீப், காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டுக்கு சீனா தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
    இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மூலமே காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற பாகிஸ்தானின் கருத்தை சீனா ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் தீவிரவாதத்தை ஒரு புறம் தூண்டிவிட்டு மறுபுறம் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பதை ஏற்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad