Header Ads

  • BREAKING



    விரைவில் காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு - ராஜ்நாத் சிங் உறுதி.


    காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். எல்லையில் பாதுகாப்பு நிலவரங்களை பார்வையிடுவதற்காக சிக்கிம் மாநிலம் சென்றுள்ள அவர், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.
    இந்தியாவை சீர் குலைப்பதற்காக காஷ்மீரில் பாகிஸ்தான் பிரச்சனையை தூண்டி விடுவதாக ராஜ்நாத்சிங் குற்றம்சாட்டினார். பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் என்று தாம் நம்புவதாக கூறிய ராஜ்நாத் சிங், மாறவில்லை என்றால் மாற்றுவோம் என்று எச்சரித்துள்ளார். காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பா.ஜ.க. அரசு முயற்சிப்பதாகவும், விரைவில் தீர்வு கிடைத்து விடும் என்றும் ராஜ்நாத் சிங் உறுதி கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad