Header Ads

  • BREAKING



    நான் ஊழல் செய்திருந்தால் இந்நேரம் பாஜக என்னை சிறையில் தள்ளியிருக்கும்: மவுனம் கலைத்த கெஜ்ரிவால்.


    ஆம் ஆத்மியிலிருந்து நீக்கப்பட்ட கபில்மிஸ்ரா அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தது குறித்து கடைசியாக மவுனம் கலைத்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
    கட்சிக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “அவரது (கபில் மிஸ்ரா) குற்றச்சாட்டுகளில் எந்த ஒரு சாராம்சமும் இல்லை, நான் 2 கோடி வாங்கினேன் என்பதெல்லாம் மிகப்பெரிய பொய். நாங்கள் எந்த ஊழலையும் செய்யவில்லை. நான் ஏதாவது ஊழலில் ஈடுபட்டிருந்தால் பாஜக என்றோ என்னை உள்ளே தள்ளியிருக்கும்.
    கடந்த சில நாட்களாக எங்கள் இயக்கம் பெரிய தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. இது ஒரு நல்ல செய்தியே, ஏனெனில் நாங்கள்தான் அவர்களுக்கு (பாஜக) பெரிய அச்சுறுத்தல் என்பது இதிலிருந்து தெரியவந்துள்ளது.
    நான் குற்றச்சாட்டுகளுக்கு வினையாற்றவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். நான் ஏன் இத்தகைய அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும்? மக்கள் என் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை நம்பவில்லை. எனக்கு எதிராக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளில் ஏதேனும் ஒன்று உண்மையென்றாலும் இந்நேரம் பாஜக என்னை சிறையில் தள்ளியிருக்கும்” என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad