தென்மேற்குப் பருவமழை கேரளாவில் இன்று தொடங்குகிறது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. திருவனந்தபுரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும், கடற்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் இன்று முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்குப் பருவமழை காலத்தில் உதகை, கோவை, தேனி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை