Header Ads

  • BREAKING



    ஆந்திராவிற்கு சென்றது கியா மோட்டார்சின் வணிக உத்தி – தமிழக அரசு.


    கியா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டாம் என முடிவு செய்தது அதன் வணிக உத்தி சார்ந்த கொள்கை என்றும் சமூக வலைதள செய்திகளைப் போன்று தமிழக அரசின் ஒத்துழைப்பின்மை காரணம் அல்ல என்றும் அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடு காரணமாகவே அந்த நிறுவனம் ஆந்திர மாநிலத்துக்கு சென்றதாக வெளியான செய்திகள் உண்மைக்கு மாறான – வேண்டுமென்றே பரப்பப்பட்டவை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கியா மோட்டார்ஸ் நிறுவன முதலீட்டை தமிழகத்துக்கு ஈர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் தொழில் பங்குதாரரான ஹூண்டாய் நிறுவனம் தொழில் திட்டங்களை அமைத்துள்ள இடங்களில் உற்பத்தியை தொடங்கக் கூடாது என்பது தங்களது கொள்கை முடிவு என தமிழக அரசுக்கு கியா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad