முதலியார்பேட்டை காவல்நிலையத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு.
புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டை காவல்நிலையத்தில் ஆய்வு நடத்திய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஆவணங்களை முறையாக பராமரிக்காத காவல் அதிகாரிகளை கடுமையாகக் கண்டித்தார்.
முருகம்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சுகாதாரப் பணிகள் குறித்து, புதுச்சேரி துணி நிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்தார். ஆய்விற்குப் பின் முதலியர்பேட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்திய அவர், தினந்தோறும் வரும் வழக்குகளின் விபரங்களை கேட்டறிந்தார். அப்போது காவல்நிலைய பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாததால், காவல் அதிகாரிகளை கடுமையாகக் கண்டித்தார்.
கருத்துகள் இல்லை