கொடநாடு எஸ்டேட் சம்பவம்: இன்று நீதிமன்றத்தில் 2 பேர் ஆஜர்.
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஒருவரை பிடிக்க தனிப்படை பிரிவு போலீஸார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.
இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கேரள மாநிலம் மலப்புரம் சிறையில் இருந்த ஜித்தின் ஜாய் மற்றும் ஜம்சீர் அலியை தனிப்படை பிரிவு போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
இந்நிலையில், கோத்தகிரி நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு இருவரும் மீண்டும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். கேரளாவில் இருந்து இருவரையும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். இருவரையும் வரும் 31-ம் தேதி ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, இருவரையும் கேரளா போலீஸார் பலத்த பாதுகாப்புடன் கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர்.
கருத்துகள் இல்லை