கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை கேரளாவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர், ஏப்ரல் 24-ம் தேதி மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடநாடு மாளிகையில் இருந்த விலை மதிப்பற்ற பொருட்கள் மட்டுமின்றி, ஆவணங்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனிடையே, தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், இதுவரை 7 பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், சயானிடம் கைப்பற்றப்பட்ட செல்போனை வைத்து ஆய்வு செய்த போலீசார், கேரள மாநிலம் வாளையாறு பகுதியில் பதுங்கியிருந்த மனோஜ்சாமி என்பவரையும் கைது செய்துள்ளனர். மனோஜ்சாமி ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ள போலீசார், அவரை கோத்தகிரிக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை