Header Ads

  • BREAKING



    ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் விபத்தில் சிக்கியதாக கூறப்படும் இடத்தில் நீலகிரி எஸ்.பி நேரில் ஆய்வு.


    கொடநாடு கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாக கூறப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படும் இடத்தை நீலகிரி எஸ்.பி. தலைமையிலான தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். கொடநாடு கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாக கூறப்படும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் ஆத்தூரில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கொடநாடு கொள்ளை வழக்கில் தேடப்பட்ட நிலையில் அவர் உயிரிந்ததில் மர்மம் இருப்பதாக தகவல் வெளியானது. கனகராஜின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரரும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள கனகராஜ் வீட்டில், கொடநாடு கொள்ளை வழக்கை விசாரித்து வரும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். கனகராஜின் அண்ணன்கள் தனபால், பழனிவேல் உள்ளிட்டோரிடம் 15 நிமிடங்கள் நடைபெற்ற விசாரணையின்போது, சங்ககிரி டி.எஸ்.பி அஷோக்குமார் உடனிருந்தார். கனகராஜ் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என, கடந்த 29-ம் தேதி சந்தேகம் எழுப்பிய அவரது அண்ணன் தனபால், தற்போதைய விசாரணையில் செய்தியாளர்களிடம் வாய் திறக்கவில்லை. கனகராஜ் வீட்டில் விசாரணை செய்த முரளி ரம்பா தலைமையிலான போலீசார், கனகராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்த இடத்தையும் இன்று காலை ஆய்வு செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad