Header Ads

  • BREAKING



    கோவை விமானநிலையத்தில் ரூ.1 கோடி வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்.


    கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற, ஒரு கோடியே நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு செல்லும் சில்க் ஏர் விமானத்தில் பயணிப்பதற்காக டெல்லியை சேர்ந்த ராகுல் மாலிக் மற்றும் ராகேஷ் குமார் ஆகிய இருவர் கோவை விமானநிலையம் வந்துள்ளனர். அவர்களிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது, அவர்கள் கொண்டு வந்திருந்த பைகளில் அமெரிக்க டாலர்கள் மற்றும் யூரோ கரன்சிகள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர்கள் அளித்த பதில் திருப்தி அளிக்காததால் அவர்களை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவ்விருவரும் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நிறைந்த திருப்பூரில் கமிஷன் அடிப்படையில் முறைகேடாக வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை பெற்று அவற்றை சிங்கப்பூர்,ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் விற்க முற்பட்டதும் தெரியவந்துள்ளது.
    இதையடுத்து அவர்கள் கொண்டு வந்த சுமார் ஒரு கோடியே நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர்கள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad