Header Ads

  • BREAKING



    சொத்துத் தகராறில் தாய் வெட்டிக் கொலை – மகன் கைது.



    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சொத்துத்தகராறில் தாயை வெட்டிக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
    பொள்ளாச்சி அருகே உள்ள மூட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் அருக்கானியம்மாள். இவரது பெயரில் உள்ள தென்னந்தோப்பை, தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு மகன் மாரிமுத்து அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். சொத்து தொடர்பாக இருவரிடையே இன்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாய் என்றும் பார்க்காமல் அருக்காணியம்மாளை கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில் சராமரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad